மதுரை மீனாஷி அம்மன் கோவில் கதை
மதுரை மீனாஷி அம்மன் கோவில் கதை பல ஆண்டுகள் முன்னால் மாலிக்கபூர் மதுரையை நோக்கிப் படையெடுத்தான்.வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல். நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கோவில்களை இடித்தான். முடியாதவற்றில் மூர்த்தியை மட்டுமாவது இடிப்பான். பல கோவில்களில் மூர்த்தியை எப்படியாவது காப்பாற்றிவிடுவார்கள் நம் மக்கள். இப்படியாக துவங்கியதுதான் கல்திரை. கர்பக்ருஹதிர்க்கு முன்னால் ஒரு சுவரை எழுப்பி அதற்கு முன் ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்துவிடுவார்கள். ஆக்கிரமிப்பாளன் வருவான். இதுதான் மூர்த்தி என்று நினைத்து இடிப்பான். இதை கேள்விப்பட்டனர் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு மிலேச்சன் கை வைக்க விடக்கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள். தாம் செய்யும் காரியத்தை நேரம் வரும்வரை யாருக்கும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்தார்கள். சுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன், மீண்டும் உன்னை எப்போது காண்போம் சர்வேசா, சுந்தரேசா என்ற...