பைரவர் மந்திரம் & பைரவர் யந்திரம்


பைரவர் மந்திரம் & பைரவர் யந்திரம்



ஸ்ரீ பைரவர் 3000 ஆண்டுகளாக இந்துக்களாலும்கிறிஸ்துவர்களாலும்புத்தமதத்தினராலும் சைவம் மற்றும் வைணவ மார்க்கத்தினராலும் பல்வேறு பெயர்களில் இன்று வரை வழிபடப்பட்டு வருகின்றனர் . 

ஸ்ரீபைரவர் சிவனின் அம்சங்களில் ஒருவர் .

சிவனின் அம்சம் என்பதும் மூர்த்தம் என்பதும் ஒன்று தான் . 

அவதாரம் என்பது இறைவன் மனிதனாகப் பிறந்து வளர்ந்து நல்லது செய்வதாகும் . அதுசமயம் அக்கடவுளின் இடம் காலியாக இருக்கும் . மூர்த்தம் என்பது அப்படி அல்ல. எங்கும்அந்த இறைவன் இருப்பவர்.

தமிழ் நாட்டில் ஸ்ரீபைரவர்  என்றும்கடவுளை பைரவர் எனவும் அழைக்கின்றனர்.

இவரே கிராமக் காவல் தெய்வமாக நின்று தந்திர சாத்திரப்படி பலி ஏற்கின்றார். கோயில்களில் முதலில் தொடங்கும் கால பூஜையும் இறுதியாக நடக்கும் இரவு பூசையும் இவருக்கு உகந்தவை.

ஏழரைச் சனிஅட்டம சனிஅர்த்தாஷ்டம சனி பிடித்துள்ளவர்கள் ஸ்ரீபைரவரை வழிபாடுசெய்வதின் மூலம் மட்டும் விடுபடுவர்.

ஒரு மனிதனுக்குள் சூட்சுமமாக இருந்து அவனுக்கு தைரியத்தை கொடுக்கும் காவல் தெய்வம் ஸ்ரீபைரவரே.



இத்தகைய சிறப்பு வாய்ந்த பைரவர் மந்திரம் 
கீழே கொடுக்கப்பட்டுள்ளது .




ஓம் பைரவா
உத்தண்ட பைரவா ,
ஏந்திய கபாலமும் ரத்தின மாலையும் நாக பாஷமும் ,
போக வேஷ்டியும்ஸ்வாநத் வாகனமும் ,அடித்த தண்டும் ,
பிடித்த பார்வையும் ,நேரிட்ட மேனியும் ,
இதோ என் காளீக்களீள் எனக்கு அருள் செய்ய புறப்பட்டார்.          

என்னுடைய பைரவனார் தன்மையைப் போல் யாம் இருப்போமென்று,
பூத பிரேத பிசாசு கணங்களைக் கட்டு,
பிற்பில்லி சூன்யம் வஞ்சனை நோயைக் கட்டு,
இரும்பு வலையை உருக்கியே எட்டுத்  திக்கும் பதினாறு கோணமும் கட்டு,
ஆகாசம் பூமி அதிரவே கட்டு,
எமனைக் கட்டு ,
எம துhதரைக் கட்டு ,
நாட்டைக் கட்டு ,
நகரத்தைக் கட்டு ,
சந்தனப் பாடு தனித்தனியே கட்டு ,
சொப்பனப் பேய்களை சுட சுட கட்டு ,
அகார உகார ஈஸ்வர புத்திராய ,
வடுக நாதாய ,
கிணி கிணி சற்வேத்நாய,
ரண்டி ரண்டி அகோர வீர பத்திராய ,
ஓம் குருவே நமசிவய சுவாஹா 




இந்த பைரவர் மந்திரத்திற்குரிய  பைரவர் யந்திரம் 
கீழே கொடுக்கப்பட்டுள்ளது .






             
ஓன்றை நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

மந்திரத்திற்கு உரிய யந்திரம் எவ்வாறு மாறுபடுகிறதோ அதே போல் தந்திரமும்மாறுபடுகிறது.

பைரவர் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட நம் வாழ்க்கையில் என்ன என்ன நிகழ்வுகள்நடக்கும் என்பதை இப்பொழுது பார்ப்போம்.

மந்திரத்தை தினமும் கண்களை மூடி ஒரே இடத்தில் ஒரே திசையில் ஒரே நேரத்தில்சொல்வதால் வரும் நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 



இவை கண்களை மூடி மந்திரம் சொல்லும் போது நடப்பவை ஆகும்.


நிலை 1ல்-- நம் எதிரே ஒரே ஒரு கண் தோன்றும்.
நிலை 2ல்-- நம் எதிரே இரு கண்கள் தோன்றும்.
நிலை 3ல்-- முகம் முழுவதும் தெரியும்.
நிலை 4ல்-- மார்பளவு உருவம் தெரியும்.
நிலை 5ல்-- உருவம் முழுவதும் தெரியும் .
நிலை 6ல்--  தான் வந்ததை தெரியப்படுத்தும் விதமாக பொருட்களை  
                          கீழே தள்ளும்.
நிலை 7ல்-- நடந்து வரும் சத்தம் கேட்கும் பெண் தெய்வமாக
                           இருந்தால் சலங்கை ஒலி கேட்கும்.

நிலை 8ல்-- சிரிக்கும் சத்தம் கேட்கும்.
நிலை 9ல்-- நம்மை சுற்றி ,சுற்றி வந்து விளையாடும் .
நிலை 10ல்- நாம் துhங்கும் போது அந்த தெய்வம் வந்து சில 
                            ரகசியங்கள் சொல்லி விட்டு போகும் .


நிலை 11ல்-- கண்ணை மூடி தியானத்தில் இருக்கும் போது அந்த 
                           தெய்வம்  நம் எதிரே வந்து ஒரு செயல்செய்யும்.
நிலை 12ல்-- அந்த காரியம் முடிவடைந்தது நமக்குத் தெரியும்.




சித்தர்களும் 12 வது நிலை தான் முக்தி என்கிறார்கள். மந்திரத்திற்கும் இது பொருந்தும்


நான் மேலே சொன்ன நிலைகள் யாவும் மேற்கண்ட பைரவர் மந்திரத்திற்கும் பைரவர்யந்திரத்திற்கும் மட்டுமே பொருந்தும்.

இங்கே ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன் நான் பைரவர் மந்திரத்தையும் ,
பைரவர் யந்திரத்தையும் ,மட்டுமே சொல்லியிருக்கிறேன். 

பைரவர் மந்திரத்திற்குரிய தந்திரத்தை இங்கே சொல்லவில்லை அதை விளக்கவில்லை.




பைரவர் மந்திரத்திற்குரிய தந்திரம் தெரியாமல் மேற்கண்ட மந்திரத்தை பயன் படுத்தினால் மேலே சொன்ன 12 நிலைகளில் எந்த நிலையும் ஏற்படாது.




எத்தனை கோடி முறை பைரவர் மந்திரத்தை உச்சாடணம் செய்தாலும் ஒரு நிலையும் தெரியாது நினைத்த காரியம் நினைத்த படி முடியாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளவும்.

Comments

Popular posts from this blog

The Letter Written by lord Venkateswara Swamy to Kubera Thousands of Years Ago

India

Stay Hydrated With High Water Content Foods